சளி சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சாதனா என்ற சிறுமியை சளிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்த செவிலியர் ஒருவர் சிறுமிக்கு 2 ஊசிகள் போட்டுள்ளார். எதற்கு 2 ஊசி போடுகிறீர்கள் என கேட்டதற்கு நாய் கடிக்கு இரண்டு ஊசி தான் போடுவார்கள் என்று கூறினார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவர் சளிக்கு நாய்க்கடி ஊசி போட்டீர்கள் என்று கேட்டுள்ளார்.

இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அலட்சியமாக ஊசி செலுத்திய செவிலியர் கண்ணகியை பணியிடம் நீக்கம் செய்து அரசு மருத்துவமனை இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.