2024-ம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வழங்கினார். இந்நிலையில் அனிமல் படத்தின் இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்காவிற்கு சிறந்த இயக்குனருக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டது.