சின்ன வெங்காயம் நேற்று 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் விலை அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்துக்கு ஏற்ப விலைகளில் தினசரி மாற்றம் ஏற்படும் விலையில் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அதன்படி பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு, தக்காளி 14 ரூபாய், உருளைக்கிழங்கு 32 ரூபாய், இஞ்சி 210 ரூபாய், கேரட் 35 ரூபாய் மற்றும் தேங்காய் 32 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நவராத்திரி மற்றும் பண்டிகை காலம் என்பதாலும் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் என்பதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.