உத்திரபிரதேச மாநிலத்தில் கெடா அப்ரோலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வாலிபர் ஒருவரை தலையில் பாதியளவு மொட்டை அடித்து முகத்தில் கருப்பு சாயம் பூசி கழுத்தில் செருப்பு மாலையுடன் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். அதாவது அந்த வாலிபர் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இதை பார்த்து கோபம் அடைந்த பகுதி மக்கள் உடனடியாக பஞ்சாயத்துக்கு வாலிபரை அழைத்து வந்தனர். இந்த பஞ்சாயத்தில் தான் வாலிபருக்கு அப்படி ஒரு தண்டனை வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவில் சில சிறுவர்கள் அந்த வாலிபரை கேலி செய்வது போன்றும் பதிவாகியுள்ளது.