
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் கரு நாகப்பள்ளி என்ற இடம் உள்ளது. இங்கு விஜயலட்சுமி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் தன்னுடைய இரு குழந்தைகளுடன் அந்த பகுதியில் மீன் வியாபாரம் செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். இவர் கடந்த 4-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை காணாததால் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அந்த புகாரின்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அவருடைய செல்போன் சிக்னலை வைத்து அதனை கண்டுபிடித்து விசாரணை நடத்தியதில் ஜெயக்குமார் என்பவருடன் விஜயலட்சுமி பேசி வந்ததை தெரியவந்த நிலையில் அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது. அதாவது ஜெயச்சந்திரனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கும் நிலையில், மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
அதே பகுதியில் விஜயலட்சுமியும் வியாபாரம் செய்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் பின்னர் அது கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. சம்பவ நாளில் ஜெயச்சந்திரன் வீட்டில் யாரும் இல்லாததால் விஜயலட்சுமி அங்கு சென்றுள்ளார். அப்போது விஜயலட்சுமி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அது தொடர்பாக ஜெயச்சந்திரன் கேட்க இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த ஜெயச்சந்திரன் ஆத்திரத்தில் அவரை வெட்டிய நிலையில் விஜயலட்சுமி இறந்தார். பின்னர் அவர் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு பகுதியில் குழி தோண்டி விஜயலட்சுமி உடலை புதைத்த அவர் மூன்று தென்னை மரங்களை நட்டு விட்டு பின்னர் அவரின் செல்போனை ஓடும் பேருந்தில் போட்டுவிட்டு அவர் வழக்கம் போல் தன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த கொலை சம்பவம் திரிஷ்யம் படம் பாணியில் அரங்கேறியுள்ளது. மேலும் தற்போது குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்த நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.