தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் கடந்த மாதம் துணிவு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த மாதம் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. நடிகர் அஜித் தனக்காக ரசிகர்கள் பணத்தை வீணாக செலவு செய்வது பிடிக்காததால் ரசிகர்கள் மன்றத்தை கலைத்தார். அதன் பிறகு தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம். அஜித் என்று அழைத்தாலே போதுமானது என்று கூறினார். எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் நடிகர் அஜித் அவ்வளவாக கலந்து கொள்ள மாட்டார்.

தன்னுடைய படம் பிடித்திருந்தால் ரசிகர்கள் வந்து பார்க்கட்டும். அதற்காக பிரமோஷன் எல்லாம் செய்ய வேண்டாம் என்று அஜித் கூறிவிட்டார். அதன் பிறகு மறைமுகமாக நடிகர் அஜித் பலருக்கும் உதவிகளையும் செய்து வருகிறார். இதெல்லாம் நடிகர் அஜித் மீதான மரியாதையை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து தற்போது அஜித் பற்றி பேசியது வைரலாகி வருகிறது. நடிகர் மாரிமுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் மாரிமுத்து நடிகர் அஜித் நடித்த ஆசை மற்றும் வாலி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அவர் அஜித் குறித்து பேசியதாவது, அந்த சமயங்களில் நடிகர் அஜித் படப்பிடிப்புக்கு பைக்கில் தான் வருவார். அவரும் நானும் பலமுறை பைக்கில் ஒன்றாக சென்றுள்ளோம். அந்த சமயத்தில் என் மகனுக்கு பள்ளியில் இடம் கிடைத்த போதும் என்னால் பீஸ் கட்ட முடியவில்லை.

இது பற்றி நான் அஜித்திடம் சொன்னபோது உடனடியாக என் மகனுக்கு அவர் பீஸ் கட்டினார். என் மகன் 10-ம் வகுப்பு படிக்கும் வரை நடிகர் அஜித் தான் பள்ளிக்கு பீஸ் கட்டினார். அவர் செய்த உதவிகளை நான் எப்போதும் மறக்க மாட்டேன். ஆனால் தற்போது நடிகர் அஜித் மிகவும் மாறிவிட்டார். சினிமா திரையுலகில் சந்தித்த பல துரோகங்களின் காரணமாக ஜாலியாக இருந்த அஜித் தற்போது மிகவும் இறுக்கமான ஒரு மனிதராக மாறிவிட்டார். மேலும் தற்போதும் நடிகர் அஜித் மறைமுகமாக பலருக்கு உதவிகளை செய்து வருகிறார் என்று கூறினார்.