
விஜயின் தமிழக வெற்றி கழக மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் தனது அரசியல் கொள்கைகள் பற்றி மக்களிடம் விரைவாக பேசிக் கொண்டிருக்கிறார். மாநாட்டில் கொந்தளித்து பேசிய விஜய் சினிமாவில் மட்டும் நடிச்சிட்டு போயிரலாம்னு தான் நினைச்சேன். ஆனா அது என்னோட சுயநலம். மாதிரி இருக்கும் நம்மள வாழவச்ச இந்த மக்களுக்கு ஏதாவது பண்ணனும்னு நெனச்ச எப்படி பண்ணலாம்னு யோசிக்கும்போது எனக்கு கிடைத்த அந்த விடைதான் அரசியல். மக்களுக்காக செய்யணும்னு நெனச்சு களத்தில் இறங்கினேன் என பேசி உள்ளார்.