தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சித்தி’ தொடர் மூலம் அறிமுகமாகி சின்னத்திரையில் 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளவர் தேவி ப்ரியா. இவர் பெரும்பாலும் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். சீரியலைப் போல சினிமாவில் உங்களால் ஏன் நிலைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு, சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் மட்டுமே வாய்ப்பு கொடுப்பதாக கூறினார்கள், நான் அப்படிப்பட்ட பெண் இல்லை என்றார்.