கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 30 ஆவது வட்டம் திடீர் குப்பத்தில் ராமலிங்கம் என்பது வசித்து வருகிறார். இவருக்கு வெல்டிங் தொழிலாளியான ராமமூர்த்தி(38) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சந்தியா(29) என்ற மனைவியும், சபரி ஸ்ரீ(9), யாழினி(6) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராமமூர்த்தி அடிக்கடி தனது மனைவியும் மற்றும் குழந்தைகளுடன் தகராறு செய்து வந்தார்.

மேலும் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்காமல் ராமமூர்த்தி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து சந்தியா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் ராமமூர்த்தி மதுபோதையில் அங்கு சென்று தனது மனைவியுடன் தகராறு செய்தார். மேலும் கோபத்தில் ராமமூர்த்தி கத்தியால் சந்தியாவை குத்த முயன்றார். உடனடியாக சுதாரித்துக் கொண்டு சந்தியா ராமமூர்த்தியிடம் இருந்து தப்பித்து தனது தந்தையுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை கயிற்றால் இருக்கினார்.

இதனால் ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமமூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சந்தியாவையும், அவரது தந்தையையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.