கடந்த 2019 ஆம் வருடம் முதல் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்துறை முற்றிலும் மோசமடைந்தது. ஏனெனில் அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி இருந்தனர். அதனை தெடர்ந்து கொரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், 2022-ல் மீண்டும் சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றது.

அந்த வகையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வரை 5.37 மில்லியன் சுற்றுலா பயணிகள் சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ளனர். அவர்களில் 48% பேர் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் என கூறப்படுகிறது. இவற்றில் இந்தியாவை சேர்ந்த 6.12 லட்சம் பேர் அடங்குவர். சிங்கப்பூர் சுற்றுலா வளர்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.