விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடினர். இதில் டாஸ் வென்ற சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து அவுட் ஆனது. அதிகபட்சமாக அணிகேத் வர்மா 74 ரன்கள்  அடித்தார். டெல்லி தரப்பில் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ்  மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள்.

கடைசியில் டெல்லி அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அனிகேத் வர்மா குல்தீப் யாதவ் வீசிய பந்தை அதிரடியாக அடித்தார். அது சிக்ஸருக்கு செல்லும் என்றும்  அனைவருமே நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜேக் பிரேசர் மெக்கர்க்  தாவி அருமையாக கேட்ச் பிடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.