
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 62 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் ராஜஸ்தான் அணி ஏறக்குறைய 16 புள்ளிகள் பெற்று ப்ளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரும், ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளதால் புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் புள்ளி பட்டியலில் ஒரு இடம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதன் பிறகு ஹைதராபாத் அணி 4-வது இடத்திலும், பெங்களூர் அணி 5-வது இடத்திலும், டெல்லி 6-வது இடத்திலும், லக்னோ 7-வது இடத்திலும், குஜராத் 8-வது இடத்திலும், மும்பை 9-வது இடத்திலும், பஞ்சாப் 10-வது இடத்திலும் இருக்கிறது. மேலும் தற்போது போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் எந்த அணி அடுத்ததாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.