டெல்லியில் நடைபெறும் சாலை விபத்தை தடுக்கும் விதமாக போக்குவரத்து கழகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நகரின் 43 சந்திப்புகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதன் மூலமாக தொடர்ந்து வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு சந்திப்பிலும் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலமாக விதிமீறுபவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அதாவது ஸ்டாப் லைனை கடந்தால், தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கினால் போன்ற பல விமீறல்களை கேமரா மூலமாக கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாலை விதிமுறை மீறிய உடனே கட்டுப்பாட்டு அறையிலிருந்து குரல் மூலமாகவே எச்சரிக்கை வழங்கப்படும். முதலில் சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படும். அதன் பிறகும் கடைபிடிக்கவில்லை என்றால் அபராதம் அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.