குஜராத் மாநிலத்தில் உள்ள வதேராவில் சாலையின் நடுவே ஒரு குழி கிடந்தது. அப்போது அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த ஒருவர் எதிர்பாராத விதமாக அந்த குழிக்குள் விழுந்துவிட்டார்.

அங்கிருந்தவர்கள் அந்த நபரை உடனடியாக குழிக்குள் இருந்து மீட்டனர். அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இந்த குழி சாலை பணிகளுக்காக தோண்டப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் குழிக்குள் தவறி விழும் வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.