
பஞ்சாபில் பில்லௌர் அருகே ஷிஸ்க் லேன் பகுதியில் பாலை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டாலாவிலிருந்து அம்பாலா நோக்கி சென்ற லாரி, ஓரமாக சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி, திடீரென பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் ஓட்டுநர் பல்வந்த் சிங் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து லாரியில் இருந்த சுமார் 23,000 லிட்டருக்கும் மேற்பட்ட பால் சாலையில் ஓடியது. இந்தக் காட்சிகளைப் பார்த்த உள்ளூர் மக்கள் உதவிக்கு வராமல், பாலை திரட்டும் வேலைக்கே முன்னுரிமை அளித்தனர்.
View this post on Instagram
வீடியோக்களில், பைகள், குடங்கள், பாட்டில்கள் கொண்டு மக்கள் பாலை சேகரிப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநர் கத்திக்கொண்டிருந்த போதும், ஒருவரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. பில்லௌர் காவல் நிலையத்தின் SHO ஜஸ்விந்தர் சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.