உத்திரபிரதேச மாநிலத்தில் விஜய் வர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் மது குடித்துவிட்டு சமையல் செய்து சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு வைத்துள்ளார். அவர் மொத்தம் 250 கிராம் உருளைக்கிழங்கு வைத்திருந்த நிலையில் அது காணாமல் போய்விட்டது. இதன் காரணமாக அவர் செல்போன் மூலம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய உருளைக்கிழங்கை காணவில்லை அதனை கண்டுபிடித்து தாருங்கள் என்று புகார் கொடுத்தார்.

பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்களிடம் விஜய் வர்மா புகார் கொடுத்த நிலையில் அவர் பேச பேச போலீசாரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் நீங்க என்ன பிராண்ட் சரக்கு குடிச்சீங்க என்று கேட்கிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.