
மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் உள்ள சான்வர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது மாணவி உற்வசி சௌதரி மொபைல் வெடிப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, உற்வசி தனது மாமியின் வீட்டில் இருந்தபோது, சார்ஜ் செய்யபட்ட நிலையில் உள்ள மொபைலை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, மொபைல் திடீரென வெடித்து விட்டது. இந்த வெடிப்பால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உற்வசி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவத்தின் பின்னர் உறவினர்கள் உடனடியாக உற்வசியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சான்வர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மொபைல் வெடிக்க காரணம் என்ன என்பதைக் கண்டறிவதற்காக போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் மொபைல் பயன்பாட்டின் போது பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.