
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டேரிப்பட்டு ஜானகி நகரில் மணிகண்ட வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இரண்டு எலக்ட்ரிக் பைக்குகளுக்கு சார்ஜ் போட்டுள்ளனர். தற்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அருகில் உள்ள கார்மேகம் என்பவரது வீட்டிற்கும் தீ வேகமாக பரவியது.
இந்த தீ விபத்தில் இரண்டு வீடுகளும் எரிந்து சேதமானது. விபத்து நடந்த போது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.