
பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கதீஜா, ரஹீமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானிடமிருந்து பிரிவதாக சாய்ரா அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏ.ஆர் ரகுமானின் தாய் கரிமா பேகம் தனது மகனுக்கு திருமணம் செய்ய விரும்பினார். அதற்கு ஏ ஆர் ரகுமானும் ஓகே சொல்லிவிட்டார். படங்களில் பிஸியாக இருப்பதால் எங்கேயும் வர முடியாது.
நீங்களே ஒரு பெண்ணை பாருங்கள் என ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். மேலும் 3 கண்டிஷன் போட்டுள்ளார். அதில் முதலாவது தனக்கு மனைவியாக வரும் பெண் நன்றாக படித்திருக்க வேண்டும் என்பதுதான். இரண்டாவது கண்டிஷன் அந்த பெண் அழகாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மூன்றாவதாக தனக்கு மனைவியாக வரும் பெண் பணிவாகவும், தன் மீது அதீத அன்பு கொண்டவராகவும் இருக்க வேண்டும் என ஏ.ஆர் ரகுமான் கூறியுள்ளார். அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் அவரது தாய் தேட ஆரம்பித்து சாய்ரா பானுவை ஏ ஆர் ரகுமானுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.