
சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டதால் ஹைபிரிட் மாடல் முறையில் போட்டி நடைபெறுகிறது. அந்த வகையில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் நிலையில் இன்று இறுதிப்போட்டியும் துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதும் நிலையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது.
இந்திய அணி துபாயில் விளையாடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு முன்னாள் வீரர்கள் கூட பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதன்படி மைக்கேல் வான், மைக்கேல் அதர்டன் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தென்னாபிரிக்க வீரர்கள் ராசி வாண்டார் டுசன், டேவிட் மில்லர் போன்றோர் இதற்கு ஆதரவு கொடுத்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தன்னுடைய யூடியூப் சேனலில் விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, வெற்றிகள் நிகழும் இடத்தைப் பொறுத்து அல்ல, அணியின் செயல்பாட்டை பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனக் கூறினார். கடந்த 2009-ல் தென் ஆப்பிரிக்கா ஒரே இடத்தில் விளையாடியும் தோல்வியடைந்தது.
கடந்த 2023 உலகக் கோப்பையில் இந்தியா 9 இடங்களில் விளையாடியதை, கூடுதலாக 2009 சாம்பியன்ஸ் ட்ரோபியில் தென் ஆப்பிரிக்கா அனைத்து போட்டிகளையும் ஒரே இடத்தில் விளையாடியும் காலிறுதிக்குத் தகுதி பெறவில்லை என்பதைக் குறிப்பிட்டார். போட்டியின் வெற்றிகள் திறமையின் அடிப்படையில் முடிவாகின்றன, காரணங்கள் சொல்லும் முறை சரியில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு மணி நேரம் பயணம் செய்தால் உடலில் லாக்டிக் ஆசிட் உருவாகும் என்பதனை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இந்த அட்டவணையை இந்தியா அமைக்கவில்லை. இது ஒரு இந்தியர் ICC தலைவர் ஆகும்முன் இருந்தே தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.