
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கேப்டன் ஆக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் பிறகு விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர்படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ் வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.