யூடியூபில் காமெடிக்கு பெயர் போன சேனல்களில் ஒன்று ஆட்டோக்காரன் சேனல். இதில் நடித்து வீடியோ வெளியிடும் மதுரையைச் சேர்ந்த இருவரும் குறைந்த காலத்திலேயே தங்களது திறமை மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை தொட்டவர்கள். சமீபத்தில் இவர்கள் சாமியார் கான்செப்ட் ஒன்றில் வீடியோ ஒன்று  பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது இருவரில் ஒருவர் சாமியார் வேடம் அணிய மற்றொருவர் வேண்டுவது போல வீடியோவை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அவ்வழியாக நடந்து செல்லும் நபர்கள் வீடியோ எடுப்பது அறியாமல் உண்மையாகவே இவர் சாமியார் தான் என நினைத்து எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் , கேள்வி எதுவும் கேட்காமல் அவரிடம் விழுந்து வணங்கி விபூதி வாங்கி செல்கிறார்கள். 

இதை பார்க்கையில், சாமியார் வேடமிட்டு வந்தால் நமது மக்கள் எந்த விசாரணையும் செய்யாமல் கண்மூடித்தனமாக அவர்களை நம்பும் மூடநம்பிக்கை இன்னும் தமிழகத்தில் உள்ளது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் அதை சமூக வலைதளங்களில் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

 

Post by @life_of_dilip_
View on Threads