
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதுநல்லூரில் மின் வியாபாரியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தினமும் ரவி குடித்துவிட்டு தகராறு செய்ததால் ஜெயந்தி தனது கணவரை கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் ஜெயந்தி சமையல் எண்ணெய் கொதிக்க வைத்து தூங்கிக் கொண்டிருந்த ரவி மீது ஊற்றினார்.
இதனால் படுகாயமடைந்த ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது ஒரு முறை ரவிக்கு உணவில் விஷம் வைத்து ஜெயந்தி கொலை செய்ய முயன்றுள்ளார். அதன் பிறகு பீரோவை தள்ளியும் அவரை கொலை செய்ய முயன்றார். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது. கடைசியாக கொதிக்கும் எண்ணையை ஊற்றி கணவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.