
ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய சாக்லேட் சிரப்பில் இறந்த எலி கிடந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரமி ஸ்ரீதர் என்ற பெண் ஜெப்போ நிறுவனத்தில் சாக்லேட் சிரப் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
அதன் பிறகு அந்த சிரப் முழுவதையும் ஒரு டம்ளரில் ஊற்றிய போது அதில் ஏதோ விழுவது போல தெரிந்தது. உடனே அதை பார்த்த போது இறந்த எலி என்பதை உறுதி செய்ய தண்ணீரில் கழுவி உள்ளார். அந்த சாக்லேட் சிறப்பை கேக்குடன் சேர்த்து சாப்பிட்ட மூன்று சிறுமிகள் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க