
உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சோகமளிக்கும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவிலான கபடி போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற வீரர் பிரிஜேஷ் சொலன்ஸ்கி, தெருநாயின் கடியால் பாதிக்கப்பட்டு, சரியான நேரத்தில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படாத காரணத்தால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 மாதங்களுக்கு முன்பு அவர் சாக்கடையில் விழுந்த ஒரு நாயை காப்பாற்ற முயன்ற போது அந்த நாய் அவரை கடித்ததாக தெரிகிறது. சம்பவம் குறித்து டைனிக் பாஸ்கர் பத்திரிகையாளர் ஆதித்யா திவாரி தனது ‘X’ கணக்கில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், தெருநாயின் கடிக்கு உட்பட்ட வீரர், ஆரம்ப அறிகுறிகளை புறக்கணித்து, தடுப்பூசியை தவிர்த்திருப்பதும், அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததையும் காணலாம்.
इसलिए कुत्ता, बिल्ली, बन्दर से दूरी बनाए…वीडियो आपको बेचैन कर सकता है।
यूपी के बुलंदशहर निवासी कबड्डी के स्टेट लेवल के गोल्डमेडलिस्ट खिलाड़ी को कुत्ते ने काटा, एन्टी रैबीज वैक्सीन नहीं ली। जब लक्ष्ण सामने आए तो सब खत्म हो चुका था।
अगर कुत्ता बिल्ली, बंदर, काट ले तो तुरंत… pic.twitter.com/vvqOiJFp6N
— आदित्य तिवारी / Aditya Tiwari (@aditytiwarilive) June 29, 2025
ரேபிஸ் தொற்றைத் தடுக்கும் வழிமுறைகளை மீறியதுதான் மரணத்துக்குக் காரணம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம், விலங்கு கடிக்கும்போது எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
தெருநாய்கள், பூனைகள், குரங்குகள் போன்ற பழக்கமில்லாத விலங்குகளின் கடியில் உடனடியாக குறைந்தது 15 நிமிடங்கள் சோப்பு மற்றும் நீர் மூலம் காயத்தை கழுவி, பிறகு மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் கட்டாயமாகும்.
தடுப்பூசிக்குப் பிறகு, பின்பற்ற வேண்டிய பராமரிப்பும் மிக முக்கியம். சிகிச்சைத் தொடங்கியவுடன் அந்த தடுப்பூசி திட்டத்திலுள்ள அனைத்து டோஸ்களும் முடிக்கப்பட வேண்டும். ஊசி போடப்பட்ட இடம் சுத்தமாகவும், ஒவ்வாமை, வீக்கம், காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புலந்த்ஷாஹர் வைரல் வீடியோ, எதிர்கொள்ளக்கூடிய தொற்று அபாயங்களை நம்மில் ஒவ்வொருவரும் புறக்கணிக்கக் கூடாது என்பதை உணர்த்தும் துயர அனுபவமாக மாறியுள்ளது. தடுப்பூசி தவிர்க்கப்பட்டால் அதன் முடிவு உயிரிழப்பாகவே முடியும் என்பதே உண்மை.