நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னதாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது அடுத்து வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கிகள் அதிகரிக்காவிட்டால் கட்சியை கலைத்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து விடுகிறேன் என்று கூறினார். அதாவது மக்கள் நல கூட்டணியை விட நான் அதிக வாக்குகள் வாங்கி தேர்தலில் நிற்கவில்லை எனில் அடுத்த தேர்தலில் கட்சியை கலைத்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறேன்.

இத எழுதி வச்சுக்கோங்க. மக்கள் நல கூட்டணி அதை தாண்டி ஒருவேளை நாம் தமிழர் கட்சி வாக்குகள் வாங்கவில்லை எனில் கட்சியை கலைத்து விடுகிறேன் என்று அழுத்தி கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவை தற்போது சீமானை விமர்சித்து அதாவது அவரை கலாய்க்கும் விதமாக இணையதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும் அந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விபரங்கள் பார்ப்போம். அதன்படி.

மக்கள் நலக் கூட்டணி என்பது 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக உருவான ஒரு அரசியல் கூட்டணி ஆகும். இந்த கூட்டணியில் தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்திருந்தன. 2016 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி மொத்தம் 6.1% வாக்குகளைப் பெற்றது. இந்த கூட்டணியில், தேமுதிக 2.4%, மதிமுக 1.9%, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 0.9%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.8%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.7%, தமிழ் மாநில காங்கிரஸ் 0.4% வாக்குகளைப் பெற்றன.

இந்த கூட்டணி எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. தேர்தலுக்குப் பிறகு, கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களது தனித்துவமான பாதையில் செயல்படத் தொடங்கின. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி (ந.த.க.) 458,104 வாக்குகளைப் பெற்று, மொத்த வாக்குகளில் 1.10% வாக்கு சதவீதத்தைப் பெற்றது.