ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவரின் இப்பேச்சு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது

இந்நிலையில் ஆளுநர் கருத்துக்கு பதில் பேசி அரசியல் மன்றமாக சட்டமன்றத்தை மாற்ற நான் விரும்பவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியானது அல்ல. ஆளுநர் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிக்கு அல்ல. ஆளுநர் அரசியல் நோக்கில் தொடர்ந்து இடையூறு தந்தால் கைதட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.