
இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரர் டேவிட் மலான். இவர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆவார். இவருக்கு தற்போது 36 வயது ஆகும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 32 டெஸ்ட் போட்டிகள், 30 ஒருநாள் போட்டிகள், 62 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இங்கிலாந்து அணி கடத்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற நிலையில் மலான் அதில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு மலான் எந்த ஒரு போட்டியிலும் விளையாட அழைக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து தற்போது அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.