
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்நிலையில் சர்தார் 2 படத்தின் சண்டைக் காட்சி இன்று நடைபெற்றது. அப்போது நடிகர் கார்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிர்பாராத விதமாக காலில் காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஒரு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் இதனால் படக்குழு இன்று சென்னைக்கு திரும்பியுள்து