திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வாசலிலேயே ஏழு பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு வாலி வரை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பரபரப்பாக இயங்கும் நீதிமன்ற வளாக வாசலிலேயே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, திமுக தனது கட்சியில் சமூக விரோதிகளுக்கு பதவியும் அதிகாரமும் கொடுத்து வருகிறது. நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என கூறியுள்ளார்.