நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தடம்பதித்துள்ள சந்திரயான் 3 திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளில் முக்கியமானவர் மணிப்பூரை சேர்ந்த நிங்தவுஜம் ரகு சிங். இந்த திட்டத்திற்காக சுமார் இரண்டு வருடங்களாக தனது குடும்பத்தையும் வீட்டையும் மறந்து ரகு சிங் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தார். தற்போது இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது இந்தியாவின் சிறந்த தருணங்களில் ஒன்று. ககன்யான் திட்டத்தின்படி விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்புவதற்கும் சூரியனை ஆய்வு செய்வதற்கான அத்தியாயத்தின் தொடக்கம் தான் இந்த சந்திரயான் 3 தரையிறக்கம். தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.