சந்திரயான் 3 திட்டத்தில் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்யும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தற்போது ஓய்வு நிலையில் உள்ளது. இவற்றை மீண்டும் செயல்படுத்த இஸ்ரோ தயாராகி வருகின்றது. இன்று அல்லது நாளைக்குள் சூரிய ஒளியை பயன்படுத்தி லேன்டர் மற்றும் ரோவரின் பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இஸ்ரோ செப்டம்பர் 22ஆம் தேதி லேண்டர் மற்றும் ரோவர் பணிகளை மீண்டும் தொடங்கும் என தெரிகிறது. நிலவில் 14 நாட்கள் பகல் மற்றும் 14 நாட்கள் இரவாக இருக்கும் என்பதால் சூரிய ஒளியால் மட்டுமே அதன் பேட்டரிகள் சார்ஜ் ஆகும்.