மக்களின் பலர் எதிர்காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருப்பதற்காக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். பல வங்கிகள் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி வீதத்தை அதிகமாக கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஐடிபிஐ வங்கியில் பிக்சட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகமான வட்டி கிடைக்கிறது. அதாவது 375 நாட்கள் மற்றும் 444 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் தொகை வழங்க அம்ரீத் என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தில் சேர முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாள் என்று  அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு அக்டோபர் 31 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்கள் 444 நாள் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7.15 சதவீத வட்டி விகிதத்தில் பலனை பெறுவார்கள். அதே போல மூத்த குடிமக்களும் இந்த திட்டத்தில் 7.65 சத வீதம்  வட்டி பெறுவார்கள். 375 நாட்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7. 10 சதவீதம் வட்டி பெறுவார்கள்.