ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கி வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட நடிகைகள் நடித்து வருகின்றனர். தற்போது சந்திரமுகி 2வில் நடிக்கும் லட்சுமி மேனன்,  இப்படத்தில் ஒரு மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் எனவும் பிளாஷ்பேக்கில் தான் அவர் நடிக்கும் காட்சிகள் இடம்பெறுகிறது எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா தான் நடிக்கிறார் என சொல்லப்படும் நிலையில், சந்திரமுகியாக லட்சுமி மேனன் தான் நடிக்கிறார் என்ற தகவலும் தற்போது படக்குழுவினர் தரப்பிலிருந்து கசிந்துள்ளது. அதன்படி இந்த படம் வெளியாகும் போது முதல் பாகத்தில் ஜோதிகாவுக்கு எப்படி மிகப் பெரிய பெயர் கிடைத்ததோ அதேபோன்று தனக்கும் கிடைக்கும் என நம்பிக்கையாக இருக்கிறாராம் லட்சுமி மேனன்.