திறன் மேம்பாட்டு வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று கைது செய்யப்பட்டார். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்திக்க சிஐடி போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தார். விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்திக்க சென்ற பவன் கல்யாணை போலிசார் தடுத்து நிறுத்தினர். இதனால் நள்ளிரவில் சாலையில் படுத்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.