சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் ஏவிய ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்கிறது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு மூன்றாவது பூவி சுற்றுப் பாதையை உயர்த்தும் நடவடிக்கையை இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது. ஆதித்யா எல் ஒன் விண்கலம் தற்போது 296 × 71,767 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மொத்தம் ஐந்து சுற்றுப்பாதை விரிவாக செயல்திட்டத்திற்கு பிறகு ஆதித்யா எல் ஒன் சூரியனின் லாக் ரேஞ்ச் புள்ளியை நோக்கி பயணிக்கும். செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல் ஒன் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.