இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் ஆதார் கார்டை வைத்து பலரும் மோசடியில் ஈடுபடுவதால் அதிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் கார்டை அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குறைந்தது பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்தையும் அப்டேட் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து ஆதார் கார்டு புதுப்பிக்க ஜூன் 11 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆதார் கார்டை அப்டேட் செய்ய முதலில் https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று மை ஆதார் என்ற பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும். பிறகு உங்களின் ஆதாரை புதுப்பிக்கவும் என்பதை தேர்வு செய்து உங்களது மொபைல் எண்ணுக்கு வந்துள்ள ஓடிபி எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் தரவு என்பதை கிளிக் செய்து தேவையான மாற்றத்தை செய்து கொள்ளலாம். பின்னர் URN என்ற எண்ணை பயன்படுத்தி ஆதார் அப்டேட்டின் நிலையை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.