சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என திமுக எம்.பி.கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திமுக மூத்த அமைச்சர் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன், இவரது மகன் கதிர் ஆனந்த் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது, கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்களின் வீடு, சிமெண்ட் கிடங்குகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நடத்தினர்.

அதில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருந்த ₹11.55 கோடியை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிந்த அமலாக்கத்துறை தற்போது விசாரணை மேற்கொண்டுவருகிறது. அதற்காக விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.