2025 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோ கோ உலகக்கோப்பை தொடர் கடந்த 13ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த தொடரில் பிரியங்கா தலைமையில் இந்திய பெண்கள் அணியும் பிரதிக் வைக்கர் தலைமையில் இந்திய ஆண்கள் அணியும் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய மகளிர் அணி தென்கொரியாவை இந்த தொடரில் 157 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இந்நிலையில் நேற்று ஆண்களுக்கான ஆட்டத்தில் இந்திய அணியும் பிரேசில் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியின் நான்கு சுற்றுகள் முடிவில் இந்திய அணி 64 – 34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.