தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் குறைந்த ஊதியத்தில் தான் அர்ச்சகர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சூழலில் இவர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவை பராமரிப்பதற்கு அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அர்ச்சர்கள் மற்றும் பூசாரிகளின் வாரிசுகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது புதிதாக பணியில் சேரும் அனைத்து அர்ச்சகர்களும் பெரும்பாலும் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் இவர்களுடைய வாரிசுகள் உயர்கல்வியை படிக்கும் வயது உடையவராகங்களை இருக்கிறார்கள் இந்த சூழலில் இவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கினால் அவர்களுடைய குடும்பத்தினர்கள் கட்டாயம் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.