
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றில் மூன்று இளம் பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் அநாகரிகமான செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற பகுதியில் உள்ள கோயிலில் அநாகரிமான செயலில் ஈடுபட்ட மூன்று இளம் பெண்கள் மற்றும் ஒரு இளைஞரை அங்கிருந்த பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் சோதனை செய்ததில் அவர்களிடம் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த மூன்று பெண்களையும் கோயிலில் இருந்து வெளியே அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த இளைஞரிடம் பொதுமக்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.