தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜான் கொக்கேன். இவர் நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். துணிவு படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீசான நிலையில், பிப்ரவரி எட்டாம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் நடிகர் ஜான் கொக்கேனின் மனைவி பூஜா ராமச்சந்திரனுக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை ஜான் கொக்கேன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நடிகர் ஜான் கொக்கேனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.