தெலுங்கானா மாநிலத்தில் ராமேஸ்வர்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு பாலசந்திரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 56 வயதாகிறது. இவருடைய மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் திருமண தேதியும் முடிவாகி அதற்கான சடங்குகள் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. அதாவது திருமணத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய மகளை கன்னியாதானம் செய்யும்போது அவர் தன் மகளின் கால்களை கழுவினார்.

அதன் பிறகு சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பாலசந்திரத்தை மீட்ட அவருடைய குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இருப்பினும் புதுமண தம்பதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு திருமண சடங்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.