
பீகார் மாநிலம் சோனேபூரில் பிரசித்தி பெற்ற பாபா ஹரிஹர்நாத் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடபாண்டிலும் கோவில் திருவிழா தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கோவிலில் பாபா ஹரிஹரநாத்திற்கு ஜலாபிஷேகம் செய்வதற்காக பக்தர்கள் டிஜே டிராலியில்(வாகனம் ) கங்கை நீரை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது டிராலி சுல்தான்பூர் கிராமத்திற்கு வந்து சேர்ந்தபோது எதிர்பாராத விதத்தில் 11000 வோல்ட் உயர் மின்னழுத்த வயரில் மேல் உரசியதில் டிராலி தூக்கி வீசப்பட்டு முழுமையாக எறிந்து போனது.
இச்சம்பவத்தில் சிறுவன் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 8 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தில் 6க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாய் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதில் தற்போது கவலைக்கிடமாய் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதன்பின் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
बिहार के हाजीपुर में बड़ा हादसा: हाई टेंशन तार की चपेट में आया डीजे, 8 कांवड़ियों की मौत; कई झुलसे#Hajipur pic.twitter.com/yxrUrbEgpJ
— Vipin Patel (@ImVipinPa29) August 5, 2024
“>