
மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கபூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தான் வீட்டிற்கு வெளியே போட்ட கோலத்தின் மீது கார் சென்றதால் ஆத்திரமடைந்து காரின் உரிமையாளருடன் தகராறு ஈடுபட்டுள்ளார். அதோடு அவர் இரும்பு கம்பி ஒன்றால் காரின் முன் கண்ணாடியையும் உடைத்துள்ளார்.
இதனை ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.