தெலங்கானா, கொத்தகோட்டா பகுதியில் சாலையோர மரத்தின் மீது கார் மோதி 3 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஓட்டுநர் தூங்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதாக கூறப்படுகிறது.