இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் சேமிப்பு திட்டங்களும் நிறைய உள்ளன. இதில் தங்களுக்கு உகந்த மற்றும் விருப்பமான சேமிப்பு திட்டங்களை மக்கள் தேர்வு செய்யலாம். அதன்படி ஒரே ஒரு முறை முதலீடு செய்து மாதம்தோறும் வருமானம் தரும் சூப்பர் திட்டம் ஒன்று உள்ளது. நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் எஸ் பி ஐ வாடிக்கையாளர்கள் 3 ஆண்டு, 5 ஆண்டு, 7 ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டு என்ற கால வரம்பில் பணத்தை டெபாசிட் செய்து அதற்கான வட்டியை மாதம் தோறும் பெறலாம்.

மேலும் மூத்த குடிமக்களுக்கு கூடுதலான வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் நபர் இறந்துவிட்டால் பணத்துக்கான நாமினி எந்த வரமும் இல்லாமல் பணத்தை முன்கூட்டியே பெறலாம். அதிலும் குறிப்பாக 15 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு முன்கூட்டியே பணம் வழங்கப்படும். மற்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் வருடாந்திர தொகையில் 75 சதவீதம் முன்கூட்டியே பயனர்கள் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.