திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நடைபெற்ற கொடூர சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு பெரியபாளையம் அருள்மிகு பவாினியம்மன் கோவிலுக்கு ஆட்டோவில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார்.

​பெரியபாளையம் அருகே சாலையில் ஆட்டோ சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் ஆட்டோ பலத்த சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியதில், ஆட்டோவில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாமி தரிசனம் செய்வதற்காகக் குடும்பத்துடன் வந்த இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் கொடுங்கையூர் மற்றும் பெரியபாளையம் பகுதி மக்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.