
சென்னையை சேர்ந்த சசிகலா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில் கோமாவில் உள்ள தன்னுடைய கணவரின் சொத்துக்களை கையாளும் விதமாக தன்னை பாதுகாவலராக நியமிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானது அல்ல. அதற்கு நிதி தேவைப்படும் நிலையில் உரிமையியல் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறப்போவது முறையற்றது என்று கருத்து தெரிவித்துள்ளது.