தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் அதிரடித் திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விரைவில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கொண்டாடும் வகையில், விஜய்யை வைத்து ‘கோட்’ (The GOAT) திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

அதில், “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான்! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்ட்டா இருப்போம்” என்று குறிப்பிட்டதுடன், “C. ஜோசப் விஜய் எனும் நான்…” எனப் பதிவிட்டு தவெக தொண்டர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளார்.

பதவியேற்பு விழாவின் போது விஜய் வாசிக்க இருக்கும் அந்த உறுதிமொழி வாசகத்தை இயக்குனர் இப்போதே சுட்டிக்காட்டியுள்ளது, சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.